செய்திகள்

வெளியானது ஆலியா பட்டின் ஹாலிவுட் பட டிரைலர்! 

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ஹார்ட் ஆஃப்  ஸ்டோன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

DIN

பிரபல இந்தி நடிகை ஆலியா பட் நடிக்கும் முதல் ஹாலிவுட் படமான ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தததாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை ஆலியா பட். அவரது முந்தையப் படமான ‘கங்குபாய் கதியவாடி’ திரைப்படம் பாலியல் தொழிலார்களைப் பற்றியது. விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இவர் முதன் முதலாக ஹாலிவுட் படமொன்றில் நடித்துள்ளார். அப்படத்தின் பெயர் ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’. இதில் பிரபல ஹாலிவுட் நடிகை ‘வொண்டர் வுமன்’ படத்தில் நடித்த கால் கோடட் மற்றும் ஜமியா டோர்னன் ஆகியோருடன் அலியா பட் நடித்துள்ளார். 

கடந்தாண்டு ஆலியா பட் அவரது காதலன், நடிகர் ரன்பீர் கபூருடன் திருமணம் நடைப்பெற்றது. இவர் நடித்து ‘டார்லிங்ஸ்’, ‘பிரம்மாஸ்திரா’ ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரமோஷன்களுக்கு ஏன் வருவதில்லை? கோபமடைந்த யோகி பாபு!

திருவையாறு எம்எல்ஏ கார் மோதி விவசாயி பலி

இஸ்ரேல் சென்றார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

கடும் போட்டிக்கு இடையே ரூ.18 கோடிக்கு ஏலம்போன பதிரானா!

மார்கழியில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எது?

SCROLL FOR NEXT