செய்திகள்

காஜல் அகர்வாலின் 60வது பட அப்டேட்! 

நடிகை காஜல் அகர்வால் பிறந்தநாளில் அவரது 60வது படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் சமீபத்தில் இவர் நடித்த 2022இல் ஹே சினாமிகா வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்லு என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது கடந்தாண்டு.  

தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியன் 2, பகவந்த் கேசரி ஆகிய படங்கள் வெளிவர உள்ளது. தற்போது காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு சத்யபாமா என்ற படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்தப்படத்தில் காவல் உதவி ஆய்வாளராக நடித்துள்ளார். 

ஏற்கனவே விஜய்யுடன் ஜில்லா படத்தில் காஜல் அகர்வால், காவலதிகாரியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT