நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் இன்று மறுவெளியீடாக வெளியாகியுள்ளது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. காவல்துறை அதிகாரியான ராகவன்(கமல்) சந்திக்கிற கொலை வழக்கும் அதன் பின்னணியும் என திரில்லர் பாணியில் உருவான இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.
இதையும் படிக்க: ரஜினி - த.செ.ஞானவேல் படத்தின் படப்பிடிப்பு எப்போது?
இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து நவீன மெருகூட்டலுடன் வேட்டையாடு விளையாடு படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னையில் வெளியான திரைகளில் காலைக்காட்சியில் ரசிகர்கள் கொண்டாட்டமாக கண்டுகளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.