செய்திகள்

ஆதிபுருஷ் படத்தை கலாய்த்து வீரேந்திர சேவாக் ட்வீட்

ஆதிபுருஷ் படத்தை பார்த்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.  

DIN

ஆதிபுருஷ் படத்தை பார்த்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார். 

தெலுங்கு நடிகா் பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த ஜூன் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வால்மீகி ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த திரைப்படம் கதாபாத்திர உருவாக்கம், வசனங்கள், காட்சியமைப்புகள், தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விமா்சனங்களை எதிா்கொண்டது.

படத்தின் இயக்குநா் ஓம் ரௌத், திரையரங்குகளில் ஹனுமனுக்கு ஓா் இருக்கையை காலியாக விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததும் விமா்சனத்துக்கு உள்ளானது. இப்படம் இந்தியாவில் சா்ச்சை எழுப்பியது மட்டுமல்லாமல், நேபாளத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆதிபுருஷ் படத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அண்மையில் பார்த்துள்ளார். தொடர்ந்து படம் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆதிபுருஷ் படத்தை பார்த்த பிறகுதான், பாகுபலி படத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது தெரிகிறது. இவ்வாறு சேவாக் கலாய்த்து பதிவிட்டுள்ளார். தற்போது இது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT