செய்திகள்

இந்த வாரம்முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர்கள்!

சின்னத் திரை தொடர்களுக்கு குடும்பத் தலைவிகளுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. சில தொடர்கள் இளைஞர்களையும் பெரிதும் கவர்கின்றன. 

DIN

பிரபல தமிழ்த் தொலைக்காட்சிகளில் புதிய தொடர்கள் இந்த வாரம் முதல் ஒளிபரப்பாகவுள்ளன. 

தமிழ்நாட்டில் சின்னத் திரை தொடர்களுக்கு குடும்பத் தலைவிகளுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. சில தொடர்கள் இளைஞர்களையும் பெரிதும் கவர்கின்றன. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் பெரும்பாலும் பெண் பார்வையாளர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது இரண்டு தொடர்கள் சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளன. 

சோனியா சுரேஷ், ஷியாம் ஜி நடிக்கும் புதுவசந்தம் தொடர் ஜூன் 26ஆம் தேதி முதல் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இந்தத் தொடர் ஒளிபரப்பப்படவுள்ளது. 

தமிழில் இதற்கு முன்பு ஒளிபரப்பான அபியும் நானும் தொடரில் ஷியாம் ஜி நடித்துள்ளார். விளம்பரப் படங்களில் நடிப்பைத் தொடங்கிய சோனியா சுரேஷ், படிப்படியாக உப்பென்னா, மிஸ்டர் பெல்லம் போன்ற தெலுங்கு மொழித் தொடர்களில் நடித்துள்ளார். 

சன் தொலைக்காட்சியில் அனாமிகா தொடர் பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகவுள்ளது. அக்‌ஷதா தேஷ்பாண்டே முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்தத் தொடர் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் திரில்லர் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

கலைஞர் தொலைக்காட்சியில் ரஞ்சிதமே தொடரின் ஒளிபரப்பு நேரம் இந்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நடித்த மனிஷஜிதா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். சித்திரம் பேசுதடி தொடரில் நடித்த சிவ் சதீஷ் ஜோடியாக நடிக்கிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

SCROLL FOR NEXT