முகப்பு
செய்திகள்

நேர்காணலின்போது திடீரென சட்டையைக் கழற்றிய பிரபல நடிகர்!

நேர்காணலின்போது பிரபல நடிகர் தன் சட்டையைக் கழற்றிய விடியோ வைரலாகி வருகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

நேர்காணலின்போது பிரபல நடிகர் தன் சட்டையைக் கழற்றிய விடியோ வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. ‘அன்னையும் ரசூலும்’, ‘கம்மட்டிபாடம்’, ‘இஷ்க்’, ‘குருப்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ஷைன். 

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலின்போது தொகுப்பாளினி ஷைனின் சட்டை நன்றாக இருப்பதாக் கூறினார்.

இதைக் கேட்ட ஷைன், உடனே தன் சட்டையைக் கழற்றத் துவங்கி பின் அதை மாட்டிக்கொண்டார். இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.