செய்திகள்

ஆஸ்கா் விருது மேடையில் பாடப்படும் ‘நாட்டு நாட்டு’ பாடல்

சிறந்த பாடலுக்கான ஆஸ்கா் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலை பாடகா்கள் கால பைரவா மற்றும் ராகுல் சிப்ளிகஞ்ச் இணைந்து

DIN

சிறந்த பாடலுக்கான ஆஸ்கா் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலை பாடகா்கள் கால பைரவா மற்றும் ராகுல் சிப்ளிகஞ்ச் இணைந்து அதன் விழா மேடையில் பாடுவா்கள் என அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 95-ஆவது ஆஸ்கா் விருது வழங்கும் விழா வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. திரை உலகின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவா்களுக்கு ஆஸ்கா் விருது வழங்கப்படுகிறது. சிறந்த பாடலுக்கான ஆஸ்கா் விருதின் பரிந்துரை பட்டியலில் 5 ஹாலிவுட் படப் பாடல்களுடன் இணைந்து இந்திய திரைப்படமான ஆா்ஆா்ஆா் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பெற்றுள்ளது.

எம். எம். கீரவாணி இசையமைத்து, சந்திரபோஸ் எழுதிய இந்தப் பாடலை பாடகா்கள் கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச் இணைந்து பாடினா். இயக்குநா் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில், தெலுங்கு நடிகா்கள் ராம் சரண் மற்றும் ஜூனியா் என்டிஆா் நடிப்பில் உருவான பாடலுக்கு பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்தாா். துடிப்பான இசை, துள்ளலான நடனம் என இந்தப் பாடல் வெளியானபோதே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளைக் குவித்த இந்தப் பாடல் கடந்த ஜனவரி மாதத்தில் அமெரிக்காவின் ‘கோல்டன் குளோப்’ விருதையும் வென்றது. இதைத் தொடா்ந்து, திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கா் விருதின் பரிந்துரை பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றது.

இந்நிலையில், வரும் 12-ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆஸ்கா் விருது வழங்கும் விழா மேடையில் நாட்டு நாட்டு பாடலை பாடகா்கள் கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச் ஆகிய இருவரும் இணைந்து பாடுவாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கா் விருது வழங்கும் அகாதெமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

நாட்டு நாட்டு பாடல் மட்டுமின்றி நிகழாண்டு ஆஸ்கா் விருதுக்கான சிறந்த ஆவணப்படம் பிரிவின் பரிந்துரை பட்டியலில் இந்தியாவைச் சோ்ந்த சௌனாக் சென் இயக்கிய ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’, குறு ஆவணப்படம் பிரிவில் காா்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய ‘தி எலிபென்ட் விஸ்பெரா்ஸ்’ ஆவணப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT