இயக்குநர் செல்வராகவன் 
செய்திகள்

'எனக்கு நண்பர்களே இல்லை..’: செல்வராகவன் உருக்கம்

நல்ல நண்பர்களை இழந்துவிடக்கூடாது என இயக்குநர் செல்வராகவன் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

DIN

நல்ல நண்பர்களை இழந்துவிடக்கூடாது என இயக்குநர் செல்வராகவன் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் செல்வராகவன். பின்னர் அவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக மோகன் ஜி. இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்திருந்தார். 

செல்வராகவன் ட்விட்டரில் அடிக்கடி பதிவிட்டு வருவார். சமீபத்தில், “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” எனப் பதிவிட்டது சர்ச்சையானது. இந்தப் பதிவுக்கு சிலர் ‘உண்மைதான்’ எனவும், சிலர்  ‘என்னாச்சி சார், நீங்களும் விவாகரத்து செய்யப்போறீங்களா?” என கேள்வி எழுப்பினர். 

இந்நிலையில், தற்போது தன் டிவிட்டர் பக்கத்தில், “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள்... ஆஷிகா ரங்கநாத்!

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

SCROLL FOR NEXT