செய்திகள்

பாரதி கண்ணம்மா -2 நேரம்? 'குக் வித் கோமாளி -4' நிகழ்ச்சியில் நடந்த மாற்றம்!

வார இறுதி நாள்களில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி சீசன் 4' நிகழ்ச்சி மக்கள் மனங்களைக் கவந்த நிகழ்ச்சிகளில் முதன்மையானது.

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோன்று சின்னத்திரை தொடர்களும் அதிக அளவிலான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 

வார இறுதி நாள்களில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி சீசன் 4' நிகழ்ச்சி மக்கள் மனங்களைக் கவந்த நிகழ்ச்சிகளில் முதன்மையானது. மூன்று சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 

'குக் வித் கோமாளி சீசன் 4' நிகழ்ச்சி ஜனவரி மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாலா, சாய் சக்தி, போன்றவர்களுக்கு பதிலாக ஜி.பி. முத்து, மோனிஷா, ரவீனா தாஹா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

கடந்த சீசனைப் போலவே இந்த 'குக் வித் கோமாளி சீசன் 4' நிகழ்ச்சியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சி சனி - ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. 

இந்நிலையில், 'குக் வித் கோமாளி சீசன் 4' நிகழ்ச்சி ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. சனிக்கிழமை 9 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு பாரதி கண்ணம்மா -2 தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT