செய்திகள்

காமாவாக நடிக்கும் மோகன்லால்?

பிரபல மல்யுத்த வீரர் தி கிரேட் காமாவாக மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிரபல மல்யுத்த வீரர் தி கிரேட் காமாவாக மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் ஜல்லிக்கட்டு, அங்கமாலி டையரிஸ், சுருளி ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. சமீபத்தில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. 

தற்போது மோகன்லால் கமல்ஹாசனுடன் இணைந்து ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தினை இயக்கிவருகிறார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். 

இந்தப்படத்தில் கமல்ஹாசன், ஜீவாவும் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.  

தற்போது, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு துணைநடிகர்களுடன் பிரமாண்டமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இந்நிலையில், இப்படத்தில் மோகன்லால் மறைந்த பிரபல மல்யுத்த வீரரான ’தி கிரேட் காமா’ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தி கிரேட் காமா என அழைக்கப்படும்  குலாம் முகமது பக்ச் பட்(1878 - 1960) பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் பிரபல மல்யுத்த வீரராக இருந்தவர். குறிப்பாக, 1902 ஆம் ஆண்டு 1200 கிலோ எடைகொண்ட கல்லை காமா தூக்கியதாகவும் வரலாற்றுத் தகவல் இருக்கிறது. 

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் மல்யுத்த வீரராக இருந்துள்ளார் காமா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT