செய்திகள்

’துருவ நட்சத்திரம்’ வெளியீட்டுத் தேதி இதுதானா?

விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு மனம் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து. ஆனால் படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தெரியாமல் இருந்தது.

இதற்கிடையே இயக்குநர் கௌதம் மேனன் ஜோஷ்வா, வெந்து தணிந்தது காடு படங்களிலும், விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களிலும் பணியாற்றி வந்தனர்.

சில நாள்களுக்கு முன்பு, துருவ நட்சத்திரம் படத்தின் பணிகள் முடிவுபெறும் சூழலில் இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கெளதம் வாசுதேவ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தை வருகிற மே 19 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் 11 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

விக்சித் பாரத்: 3 ஆயிரம் இளைஞர்களுடன் உரையாடுகிறார் பிரதமர் மோடி!

பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக் கொலை! மனித உரிமைக் குழு போராட்டம்!

ஷாகித் கபூரின் ஓ ரோமியோ படத்தின் டிரைலர்!

இருளில் மூழ்கிய கோடிக்கோட்டை சுங்கச்சாவடி! கட்டணமின்றி சென்ற வாகனங்கள்!

SCROLL FOR NEXT