'ஓஷோவை விட தனித்துவமானவர் ரஜினி..’: பிரபல இயக்குநர்
ஒஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த் என பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஒஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த் என பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: ’டாடா’ ஓடிடி வெளியீடு எப்போது?
Advertisement
Advertisement
இந்நிலையில், அல்போன்ஸ் புத்திரன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் ரஜினி சார், நான் கேட்டதிலேயே சிறந்த பேச்சு உங்களுடையதுதான். என்னைப் பொறுத்துவரை நீங்கள் ஓஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவர். உங்களின் பேச்சு புல்லரிக்க வைக்கிறது. அனைவராலும் இப்படி தங்கள் பேச்சால் புல்லரிக்க வைக்க முடியாது. விரைவில் இன்ஸ்டாகிராமுக்குள் நுழைந்து உங்களுக்கு தோன்றுவதைப் பேசுங்கள். நீங்கள் ஏ.பி.சி.டி. எனச் சொன்னாலும் அது தாளம் போலத்தான் இருக்கும். உங்கள் பேச்சைக் கேட்க மில்லியன், பில்லியன் ரசிகர்கள் காத்திருக்கிறோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.