தனுஷின் வாத்தி திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் பிப்ரவரி 17ஆம் வெளியான திரைப்படம் வாத்தி. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கல்வியை மையமாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை புரிந்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க- சீரியலில் மட்டுமல்ல... நிஜ வாழ்க்கையிலும் இணைந்த நடிகர்கள்!
கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படமும் ரூ.100 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.