செய்திகள்

'பாக்கியலட்சுமி' தொடரிலிருந்து விலகுகிறாரா கோபி?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடரில் கோபி பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சதீஷ் குமார் விலகவுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடரில் கோபி பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சதீஷ் குமார் விலகவுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

'பாக்கியலட்சுமி' தொடரில் பழனிசாமி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஞ்சித் அறிமுகமாகியுள்ளார். இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து மக்களின் அபீமானம் பெற்றவர். 

முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற தொடரில் இவர் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் நடிக்கவுள்ளார். 

இவர் 'பாக்கியலட்சுமி' தொடரில் நடித்த புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோ மூலம், 'பாக்கியலட்சுமி'க்கு ஆதரவாக பயணிக்கும் கதாபாத்திரமாக பழனிசாமி பாத்திரம் இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்நிலையில், 'பாக்கியலட்சுமி' தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்த (கோபி) சதீஷ்குமார் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, '''பாக்கியலட்சுமி' புரோமோவை அனைவரும் பாத்திருப்பீர்கள். 'பாக்கியலட்சுமி' தொடர் மீது நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி.

இப்போது அறிமுகமாகியுள்ள ஹீரோ ரஞ்சித் சாருக்கு அதே அன்பை நீங்கள்ல் காட்ட வேண்டும். இந்தத் தொடரில் கோபி கதாபாத்திரம் ரொம்ப குறைய வாய்ப்புள்ளது. கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் பயணித்துள்ளேன். வயதாகிவிட்டது அதனால் கொஞ்ச நாளுக்கு ஓய்வு எடுக்கவுள்ளேன் எனக்குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT