செய்திகள்

பொம்மை நாயகி: ஓடிடி வெளியீடு அறிவிப்பு

நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவான பொம்மை நாயகி திரைப்படத்தின் ஓடிடி தள வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

DIN

நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவான பொம்மை நாயகி திரைப்படத்தின் ஓடிடி தள வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் பொம்மை நாயகி. இயக்குநர் ஷான் இயக்கிய இந்தப் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் பரியேறும் பெருமாள், கபாலி, ஜெய் பீம் படங்களில் நடித்து கவனம் பெற்ற  நடிகை சுபத்ரா, யோகி பாபுவின் மனைவியாக நடித்துள்ளார். அறிவு, கபிலன், இளைய கம்பன் மற்றும் சிலர் படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார்கள்.  சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார். 

இந்தப் படம் கடந்த பிப்.3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

அதன்படி ஜீ5 தளத்தில் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

போராடும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

SCROLL FOR NEXT