செய்திகள்

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த நக்மா!

நடிகையும் அரசியல்வாதியுமான நக்மா ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

நடிகையும் அரசியல்வாதியுமான நக்மா ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’காதலன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நக்மா. அதன்பின் பாட்சா, வில்லாதி வில்லன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். 

பின், நடிப்பில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததுள்ளது. அந்த லிங்க்கை திறந்தவுடன் நக்மாவை தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை வங்கி அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டு வங்கிக்கணக்கு விவரங்களைப் கேட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட நக்மா அத்தகவல்களை கொடுக்க மறுத்திருக்கிறார்.

இருப்பினும், சில நிமிடங்களில் அவர் கணக்கிலிருந்து ரூ.99,998 எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த நக்மா மும்பை சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக, நடிகை ஸ்வேதா மேனனிடமும் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

SCROLL FOR NEXT