செய்திகள்

இணையத்தில் கசிந்த ‘ஜவான்’ படத்தின் காட்சிகள்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜவான்’ படத்தில் இருந்து சண்டைக்காட்சி விடியோ இணையத்தில் கசிந்துள்ளது. 

DIN

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசை - அனிருத். ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுடன் 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டையிட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

யானிக் பென் என்பவர் இந்தப் படத்திற்கு சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவருடன் இன்னும் பலர் சண்டைக்காட்சிகளுக்கென்றே பிரத்யேகமாக பங்குபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து ஷாருக்கான் வெறித்தனமாக சண்டையிடும் 6 நொடி சண்டைக்காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. பெல்டால் எதிரிகளை அடிக்கும் காட்சிகளை ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. இது ஜவான் படத்தின் காட்சிகள்தானா என படக்குழு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. அந்தக் காட்சிகளை போலவே போஸ்டர்கள், படங்களை வரைந்து சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் படம் வெளியாக உள்ளது. மேலும், நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிட்டத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT