செய்திகள்

மாளவிகாவை ‘க்யூட்’டாக புகைப்படமெடுத்த நடிகர் விக்ரம்! 

தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் எடுத்த மாளவிகாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தின் தலைப்பு அறிமுக விடியோ அக்டோபர் 23இல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு தங்கலான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை இந்தப் படம் பேசுவதாக கூறப்படுகிறது. டீசரிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெறும் கதை என டீசர் மூலம் நமக்கு தெரிய வருகிறது. 

சமீபத்தில் தங்கலான் படத்தில் மாளவிகா சரியாக நடிக்கவில்லை என வதந்தி வெளியானது. பின்னர் மாளவிகா சிலம்பம் பயிற்சி எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்க்க முடிந்தது. சமீபத்தில் கடலோரத்தில் பாறையின் மீதிருந்து சிலம்பம் சுற்றும் விடியோவை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் தங்கலான் படத்தின் படப்பிடிப்பின் ஓய்வு நேரத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தினை மாளவிகா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தினை நடிகர் விக்ரம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரில் நடிகர் விக்ரம் தங்கலான் படப்பிடிப்பிலிருந்து அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார். 

மாளவிகா இதனை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து, “பாம்புகள், ஏணிகள் மற்றும் நிழல்கள். படப்பிடிப்பில் இருந்து ஒருநாள் ஓய்வு கிடைக்கும்போது நம்முடன் ஒரு அசாத்தியமான புகைப்பட கலைஞர் இருந்தால்..” என நடிகர் விக்ரமை டேக் செய்து பதிவிட்டுள்ளார். 

ஏற்கனவே ஒரு நேர்காணலில் நடிகை பார்வதி தங்கலான் படத்தில் நடிப்பதற்கு கடினமாக இருந்ததாக தெரிவித்திருந்தார். இதனால் படம் சிறப்பாக வருமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT