இறுதிக்கட்டத்தில் ‘மாவீரன்’ படப்பிடிப்பு
மாவீரன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவீரன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மண்டேலா திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் மாவீரன். ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார்.
பிரின்ஸ் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்தப் படம் வெளியாக உள்ளதால் இதில் சிவகார்த்திகேயன் மிகவும் கவனமாக நடித்து வருவதாக சினிமா வட்டாரங்கள், தகவல்கள் தெரிவிக்கின்றன. மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைக்கிறார்.
Advertisement
இதையும் படிக்க: சிம்பு படத்தில் கமல்ஹாசன்!
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மாவீரன் படத்தின் சாட்டிலைட், ஓடிடி, இசை உரிமம் ஆகியவை ரூ.63 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல்!