செய்திகள்

'சீதாராமன்' தொடரில் புதிதாக களமிறங்கும் 'தெய்வமகள்' வில்லி!

'தெய்வமகள்' தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்துவந்த ரேகா கிருஷ்ணப்பா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

'தெய்வமகள்' தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்துவந்த ரேகா கிருஷ்ணப்பா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் கடந்த 2013 முதல் 2018 வரை ஒளிபரப்பான தொடர் தெய்வமகள். திருமதி செல்வம் தொடரை இயக்கிய குமரன் இயக்கத்தில் உருவான 'தெய்வமகள்' தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது. 

வாணி போஜன், கிருஷ்ணா மற்றும் ரேகா கிருஷ்ணப்பா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் நடித்த வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக நடித்து வருகிறார்.

ரேகா கிருஷ்ணப்பா எதிர்மறையான (வில்லி) பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். அவர் சிறிது இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரை தொடரில் நடிக்கவுள்ளார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரில் அவர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்மறை பாத்திரங்களில் நடித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்த ரேகாவுக்கு இந்தத் தொடரில் எந்தவிதமான கதாபாத்திரம் அமையும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தத் தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி எதிர்மறை பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ரோஜா புகழ் பிரியங்கா நல்காரி நாயகியாக நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT