கோப்புப்படம் 
செய்திகள்

திரும்ப வந்துட்டேனு சொல்லு: அதிரடி காட்டும் கோபி!

பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்கவுள்ளதாக சதிஷ் அறிவித்துள்ளார்.

DIN

பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்கவுள்ளதாக சதிஷ் அறிவித்துள்ளார்.

சின்னத்திரை தொடர்களில், பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு உருவாக்கமாக பாக்கியலட்சுமி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த தொடரில் கோபியின் இரண்டாவது மனைவியான ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். ரித்திகா அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சதிஷ் நடிக்கும் கோபி கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

சதிஷ் சில தினங்களுக்கு முன்பு அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், "வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் இருக்க கூடாது. நேற்றுவரை நான் பெரிய மேதாவி, புத்திசாலி, உலகத்தையே மாற்றலாம் என நினைத்தேன். நான் என்னையே மாற்றிக்கொண்டேன், இந்த உலகத்தை எல்லாம் மாற்ற முடியாது. என்னை மட்டும் தான் என்னால் மாற்றிக்கொள்ள முடியும்" எனத் தெரிவித்து இருந்தார்.

இந்தப் பதிவின் மூலம் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து கோபி கதாபாத்திரத்தில் நடித்துவந்த சதிஷ் வெளியேறியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சதிஷ் சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “சில தனிப்பட்ட காரணங்களுக்காக பாக்கியலட்சுமி தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தேன். இப்போது அந்த  பிர்ச்னைகள் தீர்ந்துவிட்டது. இனி உங்கள் கோபியாக பாக்கியலட்சுமி தொடரில் நடிப்பேன்” எனத் தெரிவித்து உள்ளார்.

இந்தப் பதிவால் பாக்கியலட்சுமி தொடர் சதிஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT