படம்: ரக்சிதா சுரேஷ்|டிவிட்டர் 
செய்திகள்

கார் விபத்தில் சிக்கிய பாடகி ரக்சிதா சுரேஷ்!

பிரபல பின்னணி பாடகி ரக்சிதா சுரேஷ் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

பிரபல பின்னணி பாடகி ரக்சிதா சுரேஷ் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6-ல் இரண்டாவது இடம் பிடித்த ரக்சிதா, இளையராஜா இசையில் முதன்முதலில் ‘எவடே சுப்ரமணியம்’ என்ற தெலுங்கு பாடத்தில் பாடினார்.

தொடர்ந்து, தமிழில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் பட்டமரங்கள் பாடல் மூலம் அறிமுகமானார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களிலும் பாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கனடா, ஹிந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஷியாக இருக்கும் ரக்சிதா, ஏ.ஆர்.ரகுமானின் இசைக்குழுவிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு விமான நிலையத்திற்கு காரில் திரும்பும் போது ஞாயிற்றுக்கிழமை காலை விபத்தில் சிக்கியுள்ளார்.

இதுகுறித்து ரக்சிதா வெளியிட்ட டிவிட்டர் பதிவில், சாலையில் நடுவிலுள்ள தடுப்பில் எதிர்பாராத விதமாக கார் மோதியதில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டதாகவும், ஏர் பேக் இருந்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT