செய்திகள்

இறுதிக்கட்டத்தை எட்டும் பிரபல சீரியல்: நாயகி உருக்கம்

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தாலாட்டு தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக அந்த தொடரின் நாயகி ஸ்ருதி ராஜ் தெரிவித்துள்ளார்.

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தாலாட்டு தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக அந்த தொடரின் நாயகி ஸ்ருதி ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது. தொடரின் சிறப்பு கிளைமேக்ஸ் காட்சி விரைவில் ஒளிப்பரப்பவுள்ளது.

இந்த தொடரின் இறுதி அத்தியாயத்தை தொடர்ந்து 4 மணி நேரம் ஒளிப்பரப்ப சீரியல் குழு திட்டமிட்டுள்ளது. தாலாட்டு சீரியல் விரைவில் நிறைவடைவதால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து தாலாட்டு சீரியலின் கதாநாயகி ஸ்ருதி ராஜ், “தாலாட்டு சீரியல் புதிய மைல்கல்லை எட்டியதில் மகிழ்ச்சி. ஆதரித்த அனைத்து ரசிகர்களுக்கு நன்றி. இசைபிரியா விரைவில் நிறையவடைய உள்ளார் என்பது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

தாலாட்டு சீரியல் 720 எபிசோடுகளை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு தொடங்கி  ஒளிப்பரப்பாகி வருகிறது. 

இந்த சீரியலில் கிருஷ்ணா, ஸ்ருதி ராஜ், ஸ்ரீதேவி அசோக், சர்வேஷ் ராகவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பிரதாப் மணி இந்த தொடரை எழுதி இயக்கி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT