ஆர்யா நடிப்பில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
கொம்பன், மருது, விரும்பன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் முத்தையா. இவரது இயக்கத்தில் வரும் ஜூன் 2-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். இதில் ஆர்யா நாயகனாகவும், சித்தி இதானி நாயகியாகவும் நடிக்கின்றனர்.
மேலும் படத்தில் பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கிறது.
முத்தையாவின் முந்தைய படங்கள் போலவே இந்த திரைப்படமும் தென்மாவட்ட பின்னணியில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.