செய்திகள்

ஜப்பான் படம் வெளியீடு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

DIN

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ட்ரீம் வாரியர் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரவிவர்மன் - ஒளிப்பதிவு. பிலோமின் ராஜ்- படத்தொகுப்பு.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில், கார்த்தியின் பிறந்த நாளையொட்டி ஜப்பான் கதாபாத்திரத்தின் அறிமுக விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், ஜப்பான் படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT