செய்திகள்

பிரதீப் வெளியேற்றம் நியாயமற்றது: ரசிகர்கள், பிரபலங்கள் கருத்து!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப்பை வெளியேற்றப்பட்டது குறித்து பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

DIN

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற போட்டியாளரான பிரதீப் ஆண்டனி, அதிரடியாக நேற்று (அக்.4) நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தகாத வார்த்தைகள் பயன்படுத்துகிறார், பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை, மோசமான செயல்களில் ஈடுபடுகிறார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது முன்வைத்தனர், சக போட்டியாளர்கள்.

பிரதீப் தரப்பு வாதத்தை இடைமறித்து  ‘நீங்கள் வெளியேறலாம் பிரதீப்‘ என கமலஹாசன் சொன்னதைத் தொடர்ந்து பிரதீப் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

பிரதீப் மீது குற்றச்சாட்டு முன்வைக்கும் சக போட்டியாளர்கள்

இந்த நடவடிக்கைக்கு பிரதீப் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களின் விமர்சனத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.

பிரதீப் நண்பரான நடிகர் கவின் தனது எக்ஸ் பக்கத்தில்,  “உன்னைத் தெரிந்த மக்களுக்கு நீ யாரென்று தெரியும்” என பதிவிட்டுள்ளார்.

பாடலாசிரியரும் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளருமான சினேகன், “நீ பார்க்காத ரணங்களும் இல்லை...நீ பார்க்காத வலிகளும் இல்லை... பிரதீப்... இதுவும் கடந்துபோகும். வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை.... வெளியே கிடக்கு வா...” எனப் பதிவிட்டுள்ளார்.

முந்தைய சீசன்களின் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவ்னி தங்களது கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

அமீர் மற்றும் பாவ்னி

அமீர் இதனை,  “நியாயமற்றது” என விமர்சித்துள்ளார்.

பாவ்னி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதீப் தனது எக்ஸ் பக்கத்தில் “எனது பிக்பிஸ் 7 கோப்பைகள்” என அவர் வீட்டில் இருந்த போது வாங்கிய லைக்ஸ், டிஸ்லைக்ஸ் மற்றும் கோல்டன் ஸ்டாரைப் புகைப்படமாகப் பகிர்ந்துள்ளார்.  

இதற்கு மாற்றான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT