செய்திகள்

'என் மகிழ்ச்சியே..’ அசோக் செல்வனை வாழ்த்திய கீர்த்தி பாண்டியன்!

நடிகர் அசோக் செல்வனின் பிறந்தநாளுக்கு நடிகையும் அவரின் மனைவியுமான கீர்த்தி பாண்டியன் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்

DIN

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுவர் அசோக் செல்வன். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து, பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இவர், நடிகர் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளான நடிகை கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்து உள்ளனர்.

இந்நிலையில், அசோக் செல்வனின் 35-வது பிறந்தநாளான இன்று, சினிமா பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், கீர்த்தி பாண்டியன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துகள் கணவரே.. எனக்கு நிகழ்ந்த மிகப்பெரிய விஷயம் நீதான். உன் அன்பும் சந்தோசமும் சிறந்ததாகவே இருக்கிறது. உன்னுடைய பரந்த மனதிற்காகவே நீ மிகுதியானவற்றை அடைவாய். என் மகிழ்ச்சியே.. நான் உன்னை நேசிக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

தங்கம் விலை: காலை ரூ. 880, மாலை ரூ.520 உயர்வு

Arasan அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்! | Mask audio launch

புதிய முயற்சியில் வெற்றி வாகை சூடும் கடக ராசிக்காரர்கள்!

கடவுள் ஒரு விதி எழுதினால், மக்கள் வேறு எழுதுகின்றனர்: பிக் பாஸ் பிரவீன்

SCROLL FOR NEXT