இந்தியன் - 2 படப்பிடிப்புக்கு தயாராகும் கமல்!
இந்தியன் - 2 திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விஜயவாடாவில் துவங்க உள்ளது.
செய்திகள்இந்தியன் - 2 படப்பிடிப்புக்கு தயாராகும் கமல்!
இந்தியன் - 2 திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விஜயவாடாவில் துவங்க உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர்.
லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே, படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர படக் குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
இதையும் படிக்க: 90 நிமிடம் பிணமாக நடித்துள்ள பிரபுதேவா!
மேலும், இந்தியன் - 2 அறிமுக விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விஜயவாடாவில் விரைவில் துவங்க உள்ளது. இதில், நடிகர் கமல்ஹாசனுக்கான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. மேலும், இப்படத்தைத் தொடர்ந்து இந்தியன் - 3 பாகத்திற்கான காட்சியையும் ஷங்கர் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.