செய்திகள்

தனிமனித தாக்குதல் விமர்சனமாகாது: டோவினோ தாமஸ் காட்டம்! 

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ்  விமர்சகர்கள் குறித்து காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

DIN

மலையாளத்தில் 2012இல்  துணை நடிகராக அறிமுகமான டோவினோ தாமஸ் பின்னர் முக்கியமான நடிகராக வளர்ந்துள்ளார். இவரது ‘மின்னல் மிரளி’ படம் உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. மாயநதி, தீவண்டி, மாரடோனா, லூக்கா, வைரஸ், கல, 2018 ஆகிய படங்கள் மிகவும் கவனிக்கப்பட்டன. 

அதிலும் ‘2018’ படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்க அனுப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 

தற்போது நடிகர் திலகம் படத்தில் நடித்து வருகிறார். அதிர்ஷ்ய ஜாலங்கள் படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கான செய்தியாளர் சந்திப்பில் தனிமனித தாக்குதல் நடத்தும் விமர்சகர்களை காட்டமாக தாக்கி பேசியுள்ளார். 

டோவினோ தாமஸ் மேலும் பேசுகையில், “கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால் விமர்சனம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்களில் ஈடுபடுவது சரியாகாது. நமது சினிமா துறையில் இப்படியான தனி மனித தாக்குதல்களால் காயமடைந்த நபர்களை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும்.  படம் இயக்குவது குற்றமில்லை. படம் இயக்குவது என்பது கலைஞர்களின் சீரிய முயற்சி. 

சரியாக விமர்சனம் செய்பவர்களுக்கு மிக்க நன்றி. அப்படியான விமர்சனங்களால் நான் மெருகேறியிருக்கிறேன். எனது அனைத்துப் படங்களிலும் நான் சிறந்தவற்றை கொடுக்க முயற்சிக்கிறேன். நேர்மறையான விமர்சனங்களை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறேன்” எனக் கூறினார். 

நவ.24ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவா்கள் தமிழகம் வந்தனா்

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காலியாகவுள்ள 2,299 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

நேபாள பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய தூதா்

SCROLL FOR NEXT