செய்திகள்

திருமண முடிவில் தமன்னா?

நடிகை தமன்னா விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

DIN

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். இறுதியாக, நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்திருந்தார்.

இவர் நடிப்பில் நெட்பிளிக்ஸில்  வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ் - 2’ தொடரில் தமன்னா இடம்பெற்றுள்ள காட்சிகள் பயங்கர கவர்ச்சியாக இருந்ததாலும் காவாலா பாடலாலும் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார்.

முன்னணி நாயகியாக இருந்தாலும் அவருக்குப் பின்  நடிக்க வந்த சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் இடத்தை தமன்னாவால் பிடிக்க முடியவில்லை. 16 ஆண்டுகளாக சினிமாவிலிருப்பவர் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமன்னா அவரின் காதலரான நடிகர் விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் வர்மாவுடன் தமன்னா!

பாலிவுட்டில் கவனம் பெற்ற நடிகராக இருக்கும் விஜய் வர்மா, தமிழில் சுதா கொங்காரா - சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT