செய்திகள்

சந்தானத்தின் 80ஸ் பில்டப்: வெளியானது புதிய பாடல்!

நடிகர் சந்தானம் நடித்துள்ள 80ஸ் பில்டப் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சந்தானம் நடிப்பில் முன்னதாக வெளியான கிக் படத்தினை தவிர்த்து தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டர்ன்ஸ் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

இந்த நிலையில், குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ள படம் ‘80-ஸ் பில்டப்’. இதில்தான் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தில், சந்தானத்திற்கு ஜோடியாக பூவே உனக்காக தொடர் பிரபலம் ராதிகா பிரீத்தி நடிக்கிறார். மேலும் இப்படத்தில்  கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். 

ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. நவ.24ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

80-களில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, ஃபேன்டசி டிராமாவாக உருவாகி வருகிறது. 18 நாட்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.90.29 ஆக நிறைவு!

சபரிமலை: பொன்னம்பலமேட்டில் திரளான பக்தர்கள் மகர ஜோதி தரிசனம்..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் துவங்கியது!

Vaa Vaathiyar - Movie Review! | எம்ஜிஆரா? நம்பியாரா? | Karthi | Nalan Kumarasamy | Dinamani Talkies

SCROLL FOR NEXT