செய்திகள்

தாமதமாகும் கேம் சேஞ்சர் பணிகள்!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்’ படத்தின் பணிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தையும் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். 

இந்தியன் 2 படத்தின் சமீபத்திய படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. சில முக்கியக் காட்சிகள் மட்டும் எடுக்கபட உள்ளன. தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் 1,000 ஸ்ட்ண்ட் கலைஞர்கள் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தை ஆகஸ்ட் 15, 2024-ல் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியன் - 2 படமும் அடுத்தாண்டு திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தைத் தொடர்ந்து ராம் சரண் தன் அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்தும் கட்டாயத்தில் இருப்பதால் இயக்குநர் ஷங்கரிடம் கேம் சேஞ்சர் படத்தை விரைவில் முடிக்க சொல்லியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால், மேம் சேஞ்சர் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்தும் திட்டத்தில் இருக்கிறாராம் ஷங்கர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT