செய்திகள்

சர்வதேச படத்திற்கு இசையமைக்கும் கதீஜா ரஹ்மான்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான்   ‘லயனஸ்’ படத்தின் மூலம் சர்வதேசளவில் அறிமுகாகிறார்.

DIN

பிரிட்டன்- இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் ‘லயனஸ்’ படத்தின் மூலம் சர்வதேசளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் கதீஜா ரஹ்மன்.

இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும் பிரிட்டனின் பிரிட்டிஷ் திரைப்பட கழகமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் இரு பெண்கள் பற்றிய கதையை மையப்படுத்தி உருவாகவுள்ளது.

சீக்கிய பேரரசின் கடைசி அரசரான மஹாராஜா துலீப் சிங்கின் மகள் சோபியா துலீப் சிங் வாழ்வையொட்டிய கதை ஒரு பகுதியாகவும் 1990-களில் வாழும் படித்த புலம்பெயர்ந்த பெண்ணின் புனைவு கதை மற்றொரு பகுதியாகவும் படத்தில் இடம்பெறவுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சோபியா, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் எனக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர்.

பிரிட்டிஷ் நடிகை பைஜ் சந்து மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோர் இந்தக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். பெண் இயக்குநர் கஜ்ரி பாபர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

அதிதி ராவ் மற்றும் பைஜ் சந்து

இந்தப் படத்தின் போஸ்டர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து கதீஜா ரஹ்மான் பேசும்போது,  “லயனஸ் படத்தில் வேலை செய்வதை கெளரவமாகவும் அதே நேரம் சுவாரசியமாகவும் உணர்கிறேன். இந்தப் படத்தின் கதையைக் கேட்டது முதலே இதனோடு பிணைக்கப்பட்டுவிட்டேன். இளவரசி சோபியாவின் போராட்டத்துக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைக்க இருப்பதே எங்களின் விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.

2020-ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்த ஃபரிஷ்தா என்கிற பாடலை கதீஜா பாடினார். அதன் பிறகு இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், பாடகர் அறிவு ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய கதீஜா, தமிழில் இயக்குநர் ஹலீதா ஷமீம் இயக்கும் மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் புதிய பாடல் அப்டேட்!

டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் விளாதிமீர் புதின்!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

SCROLL FOR NEXT