செய்திகள்

தள்ளிப்போனது துருவ நட்சத்திரம்!

விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

DIN

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம்.  இந்தப் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

காரணம், சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க ரூ.2.40 கோடியை  ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம்  கெளதம் வாசுதேவ் மேனன் பெற்றதாகவும் ஆனால், அப்படத்தை அவர் முடிக்கவில்லை என்று  பங்குதாரர் வழக்கு தொடர்ந்தார்.

இதனால், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ.2 கோடியை திரும்ப அளிக்க வேண்டும் என்று  துருவ நட்சத்திரம் திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், அத்தொகையை வழங்கததால் திரைப்படம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  மறுவெளியீட்டுத் தேதி மீண்டும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசீகரத்தின் உறைவிடம்... ஜொனிதா காந்தி!

சுவர் இருப்பின் சித்திரம்... நிகிதா ஷர்மா!

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் அளிப்பு

SCROLL FOR NEXT