செய்திகள்

புது வீடு வாங்கிய பிரபல செய்தி வாசிப்பாளர்!

பிரபல செய்தி வாசிப்பாளரும், சீரியல் நடிகையுமான சரண்யா துராடி புது வீடு ஒன்றை வாங்கியுள்ளார். 

DIN

பிரபல செய்தி வாசிப்பாளரும், சீரியல் நடிகையுமான சரண்யா துராடி புது வீடு ஒன்றை வாங்கியுள்ளார். 

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து, நெஞ்சம் மறப்பதில்லை, வைதேகி காத்திருந்தாள் ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். 

செய்திவாசிப்பாளராகவும் செய்தியாளராகவும் இருந்தவர் சரண்யா துராடி. நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவருக்கு 2017ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமானார். 

தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரன் தொடரில் நாயகியாக சரண்யா நடித்தார். 2020ஆம் ஆண்டு ஆயுத எழுத்து தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து, வைதேகி காத்திருந்தால் தொடரிலும் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். 

இந்த நிலையில், சரண்யா துராடி புது வீடு ஒன்றை வாங்கியுள்ளார். புது வீட்டின் புகைப்படங்களை சரண்யா துராடி பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT