பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் இன்று (அக். 1) தொடங்கவுள்ளது.
மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி, போட்டியாளர்களை அறிமுகம் செய்யவுள்ளார்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் 7வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். கடந்த சீசன்களில் ஒரு வீட்டில் போட்டியாளர்கள் இருந்தனர்.
ஆனால், இம்முறை 2 பிக் பாஸ் வீடுகள் உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். இதனால், பிக் பாஸ் -7 மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிக் பாஸ் -7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த சீசனில், நடிகர்கள் பிரதீப் ஆண்டனி (வாழ் பட நாயகன்) சரவண விக்ரம், ரவீனா தாஹா, விஷ்ணு விஜய், விணுஷா தேவி (பாரதி கண்ணம்மா -2 நாயகி), மாயா கிருஷ்ணன், அக்ஷயா உதயகுமார், விசித்ரா, கூல் சுரேஷ், அனன்யா ராவ், மாகாபா ஆனந்த், ஜோவிகா விஜய்குமார் (நடிகை வனிதா மகள்) பாடகர் யுகேந்திர ராகவேந்திரன், ராப் பாடகர் நிக்ஷன், நடனக் கலைஞர்கள் ஐஷு - மணி சந்திரா - விஜய் வர்மா உள்ளிட்டோர் பங்கேற்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.