செய்திகள்

வெளியானது டைகர் நாகேஸ்வர ராவ் டிரைலர்!

ரவி தேஜா நடிக்கும் பான் இந்திய படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

1970-களில் ஆந்திராவில் ஸ்டூவர்ட்புரம் என்ற இடத்தில் ராபின் ஹுட்டாக வாழ்ந்த டைகர் நாகேஸ்வர ராவ் என்பவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது.

ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  

பான் இந்தியப் படைப்பான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தின் முதல் பாடலான ‘ஏக்தம் ஏக்தம்’ பாடலின் லிரிக்கல் விடியோவும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தமிழில் இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். அஜய் கிருஷ்ணா பாடியுள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. வம்சி இயக்கிய இப்படம் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

SCROLL FOR NEXT