செய்திகள்

கவனம் ஈர்க்கும் சப்த சாகரதாச்சே எல்லோ திரைப்படம்!

நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் வெளியான சப்த சாகரதாச்சே எல்லோ திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

DIN

ரக்‌ஷித் ஷெட்டி, ருக்மணி வசந்த் நடிப்பில் வெளியான கன்னட திரைப்படம் ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ' படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. 

கடந்த செப்.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தொடர்ந்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பின் இந்திய அளவில் இப்படம் கவனம் ஈர்த்துள்ளது.

கார் ஓட்டுநரான காதலன், தன் காதலி சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என ஆசைப்பட்டு செய்யாத குற்றத்திற்காக பணத்தை வாங்கிக்கொண்டு சிறைக்குச் செல்கிறான். அங்கு, அவன் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் வெளியில் இருக்கும் காதலியின் நிலையுமாக கதை விரிகிறது. இறுதியில் ஒரு டிவிஸ்டைக் கொடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான சைட் பி-க்கு  முன்கதைச் சுருக்கத்தைக் கூறியிருக்கின்றனர். 

கன்னட ரசிகர்களை மட்டுமின்றி இப்படம் பலரையும் கவர்ந்து வருவதால் நவம்பர் மாதம் வெளியாகும் அடுத்த பாகத்திற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திராவிட வெற்றிக் கழகம் - கட்சித் தொடங்கினார் மல்லை சத்யா!

சின்ன வடுகப்பட்டியில் வீடுகளுக்கு சீல்: அறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்து அரசியல் கட்சியினர், குடியிருப்புவாசிகள் போராட்டம்

26,100 புள்ளிகளுக்கு மேல் நிஃப்டி! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்

காலேஜ் கட் அடித்துவிட்டு படம் பார்க்க வேண்டாம்: கவின்

SCROLL FOR NEXT