செய்திகள்

அயலான் படத்துக்காக சம்பளம் வாங்காமல் நடித்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகாா்த்திகேயன் அயலான் படத்துக்காக சம்பளம் வாங்கவில்லை என டீசர் வெளியிட்டு விழாவில் பேசியுள்ளார். 

DIN

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

சிவகாா்த்திகேயனின் மாவீரன் வெற்றிக்குப் பிறகு இந்தப் படம் வெளியாவதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புள்ளது. 

அயலான் டீசர் வெளியிட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், “படம் முதல் பாதி நகைச்சுவையாக இருக்கும். இரண்டாம் பாதி வேறு விதமாக இருக்கும். இந்தப்படம் 20 வருடம் கழித்து ரிலீஸ் ஆனாலும் நன்றாக இருக்கும். ஏனெனில் இந்தப் படத்தின் கதை அந்த மாதிரியிருக்கும். 

‘இன்று நேற்று நாளை’ படம் மிகவும் பிடிக்கும். பின்னர் அவருடன் பேசினேன். அவர் கதை சொல்வதற்கு முன்னமே அவரது படத்தில் நடிக்க முடிவு செய்து விட்டேன். ஏனெனில் அவரது திறமை மீதும் அவர் பழகும் விதமும் பிடித்திருந்தது. 95 நாள்களில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 

இந்த மாதிரி ஏலியன் படத்தினை எம்ஜிஆர் எடுக்க முயற்சித்துள்ளார். அதற்கடுத்து நான்தான். எம்ஜிஆருக்கு அடுத்து நான்தான் என யூடியூபர்கள் தலைப்பு வைக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். மற்றுமொரு நற்செய்தி-மீண்டும் இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். 

பணப்பற்றாக்குறையால் இந்தப்படம் ஒருமுறை பிரச்னையில் சிக்கியது. அப்போது நான் சம்பளம் வாங்காமல் நடித்து முடித்துக் கொடுக்கிறேன் என்றேன். பணத்தைவிட நான் சம்பாதித்த சொத்து இயக்குநர் ரவிக்குமார். இவ்வளவு விஎஃப்க்ஸ்களை கொண்ட படமும் இந்த மாதிரி கதையை கொண்ட படமும் இந்திய சினிமாவில் இதுவரை வெளியாகவில்லை என்பதை தைரியமாகவே சொல்லுவேன். அயலான் பொங்கலன்று வருவான் கவருவான்..” எனப் பேசினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT