செய்திகள்

ஒருநாள் முன்பே வெளியாகும் லியோ? 

விஜய் நடித்துள்ள லியோ படம் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

விஜய் நடித்துள்ள லியோ படம் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் லியோ. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பிரமாண்ட பொருட் செலவில் தயாரித்துள்ளது.

படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கடந்த 5ஆம் தேதி வெளியான படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை 37 மில்லியன் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. 

இதனிடையே லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அரசுத் தரப்பில் இருந்து இதுவரை எந்த அனுமதியும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், படத்தை ஒருநாள் முன்னதாகவே அதாவது அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸ் செய்திட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT