செய்திகள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்?

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

துணிவு படத்தைத் தொடர்ந்து  நடிகர் அஜித்குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருவதாகவும் அங்கு 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் நடிகை த்ரிஷாவும் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்.

இந்நிலையில், விடாமுயற்சி படத்திற்குப் பின் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இதனை தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கிறார் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.  

மார்க் ஆண்டனி வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் இணைய உள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

SCROLL FOR NEXT