செய்திகள்

எதிர்நீச்சல் - பிக் பாஸ்: என்ன ஒற்றுமை?

எதிர்நீச்சல் தொடரும், விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த இரண்டும் எங்கு தொடர்புறுகின்றன, எதற்கு அதிக பார்வையாளர்கள் உள்ளனர் என்பது குறித்து காணலாம்.  

எஸ். மணிவண்ணன்

சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடரும், விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் -7 நிகழ்ச்சியும் மக்களால் அதிகம் பார்க்கப்படுகின்றன. இந்த இரண்டும் எங்கு தொடர்புறுகின்றன, எதற்கு அதிக பார்வையாளர்கள் உள்ளனர் என்பது குறித்து காணலாம்.  

சன் தொலைக்காட்சியில் ஞாயிறு உள்பட வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகிவரும் தொடர் எதிர்நீச்சல். முன்பு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்தது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி காரணமாக இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் காரணமாக அதே நேரத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தத் தொடரில் நக்கல் - வில்லத்தனம் - பாசம் என அனைத்தையும் கச்சிதமாக கொடுத்து மக்கள் மனங்களில் நின்ற பாத்திரம் ஆதி குணசேகரன். இந்த பாத்திரத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு பதிலாக வேல ராமமூர்த்தி தற்போது நடித்து வருகிறார். 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு குணசேகரன் பாத்திரம் திரையில் வருகிறது. அதுவும் வேல ராமமூர்த்தி நடிக்கவுள்ளார், அவரின் நடிப்பு மாரிமுத்து அளவுக்கு இருக்குமா என்பது போன்ற காரணங்களால், எதிர்நீச்சல் தொடரின் மீது இருந்த எதிர்பார்ப்பு மேலும் கூடியது. 

அதன் விளைவாக வேல ராமமூர்த்தி அறிமுகமான முதல் வாரத்தில் எதிர்நீச்சல் தொடரின் டிஆர்பி இதுவரை இல்லாத அளவு 11.54 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. முன்பு 10 புள்ளிகளுக்கு மேல் மட்டுமே இருந்து வந்தது.

ஆனால், இந்த டிஆர்பி போகப்போக மாற அதிக வாய்ப்புள்ளது. காரணம், ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி முழுமையாக பொருந்தாதுதான். வேல ராமமூர்த்தி கடும் கோபக்காரராக, கரடுமுரடான தோற்றத்தை அளிக்கிறாரே தவிர, மாரிமுத்து அளவுக்கு குடும்பத்தாரிடம் அவ்வபோது தோற்று நக்கல் நையாண்டி மூலம் மக்களைக் கவருவார். அது இவரிடம் சற்று குறைவுதான் என்பது ரசிகர்கள் கருத்தாக உள்ளது. 

பிக் பாஸ் தொடரும் வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக வார இறுதி நாள்களில் கமல் தோன்றும் எபிஸோட்கள். இம்முறை இரண்டு வீடு என்பதால், பிக் பாஸ் சீசன் 7 மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. 

இரண்டு வீடு என்பதால் போட்டியாளர்கள் எண்ணிக்கை, நாமினேஷன், வெளியேற்றப்படும் நபர்கள், விதிமுறைகள் போன்றவற்றில் ரசிகர்களுக்கு பல்வேறு கேள்விகள் இருந்தன. அது எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது. 

அந்த எதிர்பார்ப்பின் எதிரொலியாக பிக்பாஸ் -7 தொடக்க நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் நாள் அதிக பார்வையாளர்கள் பிக் பாஸ் -7 பார்த்ததாக பதிவாகியது. 

என்னதான் எதிர்பார்ப்பு இருந்தாலும் முன்னணி தொடர்கள் பெறும் டிஆர்பியை பிக் பாஸ் -7 நிகழ்ச்சியால் நெருங்க முடியவில்லை.

பிக்பாஸ் - எதிர்நீச்சல் வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரமே கல்வி குறித்து எழுந்த கருத்து புகைந்துகொண்டிருந்தது. கல்வி அவசியமில்லை. கல்வி இல்லாமல் வாழ்க்கையில் சாதிப்பதற்கு நிறைய இருக்கின்றன. எல்லோரும் மருத்துவர் ஆகிவிட்டால், கம்பவுன்டராக யார் இருப்பது? போன்று போட்டியாளர் (ஜோவிகா) பேசினார். 

பிக் பாஸ் - 7 நிகழ்ச்சியில் ஜோவிகா

ஒரு மனிதனுக்கு கல்வி அவசியம். அதிலும் குறிப்பாக பெண்கள். இளம் தலைமுறையினர் குறைந்தபட்சம் அடிப்படை கல்வியையாவது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அது பின்னாளில் உங்களுக்கு உதவும். படிப்பு கிடைக்காமல், படிக்க பணம் கட்ட முடியாமல் பலர் உள்ளனர். வாய்ப்பு கிடைத்தவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை (விசித்ரா) முன்வைத்தார்.

கல்வி குறித்த இந்த விவாதம் பிக் பாஸ் வீட்டில் சண்டையில் முடிந்தது. 

பிக் பாஸ் - 7 நிகழ்ச்சியில் விசித்ரா

இந்த சம்பவம் நடந்ததைப்போன்று எதிர்நீச்சல் தொடரிலும் கல்வி குறித்த விவாதம், குறிப்பாகபெண் கல்வி குறித்த விவாதம். இத்தொடரில் வரும் ஜான்சி ராணி, பெண்கள் படித்திருப்பதால்தான் கணவரை மதிக்கவில்லை. குடும்பத்தாரை சிறைக்கு அனுப்புகின்றனர். நான் பெண் தானே. நான் படித்துவிட்டா வாழ்கிறேன் என்பது போல் பேசினார். 

எதிர்நீச்சல் தொடரில் கல்வி குறித்து ரேணுகா ஆவேசமாக பேசும் காட்சி

அதற்கு பதிலடி கொடுத்த ரேணுகா, கஞ்சா விற்றவளுக்கு, பிட்பாக்கெட் அடித்தவளுக்கு கல்வியைப் பற்றி என்ன தெரியும். கல்யாணம் செய்துகொள்வதும், குழந்தை பெற்றுக்கொள்வது மட்டும்தான் வாழ்க்கையா? ஒரு சமூகத்துக்கு படிப்பு எத்தனை அவசியம் என்பது ஏதாவது தெரியுமா? என அடுக்கடுக்காக வாதங்களை முன்வைக்க... சுவாரஸியம் மேலும் கூடி குழாயடி சண்டையாக மாறியது. 

இந்த இரண்டும் ஒரே வாரம் ஒளிபரப்பானதால், எதிர்நீச்சல் தொடரின் இந்த எபிஸோடை கமல்ஹாசன் கண்ணில்படும்வரை பகிரவும், எதிர்நீச்சல் தொடரில் பிக்பாஸ் ஜோவிகாவுக்கு பதில் கொடுக்கப்பட்டது என்பது போன்ற கருத்துகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT