செய்திகள்

800 நாள்களைக் கடந்த சுந்தரி சீரியல்! ரசிகர்கள் வெளியிட்ட சிறப்பு போஸ்டர்!!

இந்தத் தொடர், டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து டாப் 5 தொடர்களில் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி தொடர் 800 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதனையொட்டி சுந்தரி தொடர் ரசிகர்கள் சிறப்பு  போஸ்டரை வெளியிட்டு குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

சன் தொலைக்காட்சியில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் சுந்தரி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

கிராமத்தில் உள்ள பெண், கணவனால் ஏமாற்றப்பட்ட நிலையில், விடாமுயற்சியுடன் படித்து ஆட்சியர் ஆகிறார். அவர் எவ்வாறு ஆட்சியர் ஆனார் என்பது முதல் பாதியாக ஒளிபரப்பானது.

தன்னை ஏமாற்றிய கணவனுக்கு பிறந்த குழந்தையை தனது குழந்தையாக வளர்த்து வருகிறார். இது இரண்டாவது பாதியாகவும் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 

தான் அழகாக இல்லை என்பதற்காக வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்ட கணவன் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைரக்கியத்துடன் சுந்தரி வெற்றி பெற்றது பல பெண் ரசிகர்களை சுந்தரி தொடருக்கு கூடுதலாக ஏற்படுத்தியுள்ளது. 

இந்தத் தொடரில் கேப்ரியல்லா, ஸ்ரீகோபிகா, ஜிஷ்ணு உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். அழகர் இந்தத் தொடரை இயக்குகிறார். 

இந்தத் தொடர் 800வது எபிஸோட் சமீபத்தில் ஒளிபரப்பானது. இதன் ஒரு பகுதியாக ரசிகர்கள் சிறப்பு போஸ்டரையும் உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இந்தத் தொடர், டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து டாப் 5 தொடர்களில் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT