செய்திகள்

முடிவுக்கு வரும் பிரபல டிவியின் நண்பகல் நேர சீரியல்!

பழனிபாரதி, சர்க்கரவர்த்தி உள்ளிட்டோர் வசனம் எழுத அருணாச்சலம் என்பவர் இயக்குகிறார். 

DIN


விஜய் தொலைக்காட்சியில் நண்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் தொடர் விரைவில் முடியவுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், தொடர்கள் (சீரியல்) ஒளிபரப்பாகிவருகின்றன.  இல்லத்தரசிகளுக்காக மதிய நேரங்களிலும் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. 

அந்தவகையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் தென்றல் வந்து என்னைத் தொடும்.

வங்க மொழியில் ஒளிபரப்பான கொலகோர் தொடரைத் தழுவி தமிழில் தென்றல் வந்து என்னைத் தொடும் தொடர் எடுக்கப்பட்டு வந்தது. 2021 ஆகஸ்ட் முதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடரில், வினோத் பாபு, பவித்ரா ஜனனி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

பழனிபாரதி, சர்க்கரவர்த்தி உள்ளிட்டோர் வசனம் எழுத அருணாச்சலம் என்பவர் இயக்குகிறார். 

அம்மன் கழுத்தில் உள்ள தாலியை எடுத்து கதாநாயகி கழுத்தில் நாயகன் போட்டுவிடுவார். இதனால், மனைவி உரிமையை நாயகன் கோருவார். இத்தகைய காட்சிகள் பெண்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. கால மாற்றம் வெகுவேகமாக நடைபெற்றுவரும் நிலையில், இத்தக்காலத்தில் இத்தகைய பிற்போக்குத்தனங்களை காட்சிகளாக்க வேண்டாம் என கோரிக்கைகள் எழுந்தன.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொடர் ஒளிபரப்பாகியுள்ளது. தற்போது இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இந்தத் தொடரை நிறைவு செய்யவும் படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல்

SCROLL FOR NEXT