செய்திகள்

கேப்டன் மில்லர்: முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி பாலன்! 

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் நடிகை  அதிதி பாலன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு  கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.

அருவி படத்தில் நடித்து கவனம் பெற்ற நாயகி அதிதி பாலன். மலையாளத்தில் நிவின் பாலியுடன் நடித்தார். தங்கர் பச்சான் இயக்கத்தில் சமீபத்தில் இவர் நடித்த ‘கருமேகங்கள் கலைகின்றன’ படம் வெளியானது.

கேப்டன் மில்லரில் முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் இருக்கு காட்சிகளில் முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT