செய்திகள்

லியோ படத்தால் லாபமில்லை - திருப்பூர் சுப்ரமணியம்

லியோ படத்தால் திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபமில்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது.

உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியான லியோ, முதல் 4 நாள்களில் ரூ.400 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதுவரை வெளியான தமிழ்ப்படங்களிலேயே அதிக வேகமான வசூல் லியோதான் என்கிற அளவிற்கு உலகம் முழுவதும் இப்படம் வருவாயை ஈட்டி வருகிறது. மேலும், இப்படம் ரூ.500 கோடி வசூலைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், “லியோ படத்தால் தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. பங்கீட்டு தொகையாக 80 சதவீத்தை லலித்குமார் பெற்றுக்கொண்டார். கேரளா, கர்நாடகத்தில் 60 சதவீத பங்கீட்டு தொகையை வாங்கியவர்கள், தமிழகத்தில் அதிக தொகையைப் பெற்றனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தால் நியாயமாக நடந்திருப்பார்கள். லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ கடுமையான ஒப்பந்தத்தை போட்டனர். லியோவுடன் வேறு நல்ல படம் வெளியாகியிருந்தால் லியோவுக்கு இத்தனை திரையரங்கம் கிடைத்திருக்காது. தீபாவளி வரை வேறு படம் இல்லை என்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நெருக்கடி கொடுத்ததால் பல திரையரங்குகள் விருப்பமில்லாமல்தான் இப்படத்தைத் திரையிட்டனர். லலித்குமார் போன்றவர்கள் இப்படி ஆதிக்கம் செலுத்தினால் சினிமா துறை எப்படி இயங்கும் எனத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT