செய்திகள்

ஓடிடியில் ரங்கோலி திரைப்படம்!

பள்ளி மாணவனின் வாழ்வினை எளிமையான கதையில் அழகாகச் சொல்லிய  ரங்கோலி  திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

DIN

பள்ளி மாணவனின் வாழ்வினை எளிமையான கதையில் அழகாகச் சொல்லிய  ரங்கோலி  திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிப்பில், இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாக வெளியான திரைப்படம் ரங்கோலி. 

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

மேலும், இப்படத்தில் பிரார்த்தனா சந்தீப், சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஆடுகளம் முருகதாஸ்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT