செய்திகள்

ரசிகர்கள் தவறவிட்ட எல்சியூ தொடர்பு: லோகேஷ் கனகராஜ் விளக்கம்! 

லியோ படத்தில் ரசிகர்கள் தவறவிட்ட எல்சியூ தொடர்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கயுள்ளார். 

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்.19ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் முதல் வாரத்தில் மட்டும ரூ.461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

படத்தின் வெற்றி விழாவை நவம்பர் 1-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரமாண்ட நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.  

லியோ படம் எல்சியூயில் (லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்) இருப்பது படம் பார்த்தவர்களுக்கு தெரியும். ஆனால் எல்சியூ தொடர்புகள் சரியாக அமையவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. மரியம் ஜார்ஜ், கமல் வாய்ஸ் ஓவர் சரியாக பொருந்தவில்லை என ரசிகர்கள் கூ்றிவந்தார்கள். 

லியோ எல்சியூ என்பதை படம் பார்த்தவர்கள் கண்டறிந்தாலும் நுணுக்கமான தகவல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். 

“விக்ரம் படத்தில் வரும் அமரும் (ஃபகத் ஃபாசில்) லியோவும் (விஜய்) சத்தியமங்கலத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் வளர்ந்தவர்கள். இது போன்ற சிறிய சிறிய நுணுக்கமான விஷயங்களை ரசிகர்கள் கண்டுப்பிடித்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன்” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

இன்னும் எல்சியூவில் என்னென்ன விஷயங்கள் லியோவில் இருக்கிறதென ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT