நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஜெயிலர் வெற்றி: அனிருத்துக்கு காசோலை பரிசளிப்பு!
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் குறித்து பேசிய காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?: ரசிகர்கள் கொந்தளிப்பு!
படத்தின் டிரைலர் (செப்டம்பர் 3) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. 23 மணி நேரத்தில் 1.6 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் விடியோ வெளியிட்டு டிரைலருக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. படமும் இதேபோல உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். தற்போது மும்பைக்கு புரமோஷனுக்காக சென்றுள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு (செப்.15) மார்க் ஆண்டனி வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.