செய்திகள்

எதிர்நீச்சலில் மாரிமுத்துவின் கடைசி எபிஸோட் இன்று ஒளிபரப்பாகிறது!

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்துவந்த மாரிமுத்துவின் கடைசி காட்சி (எபிஸோட்) இன்று (செப். 11) ஒளிபரப்பாகிறது.

DIN

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்துவந்த மாரிமுத்துவின் கடைசி காட்சி இன்று (செப். 11) ஒளிபரப்பாகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் வில்லனாக நடித்துவந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (செப்.8) காலமானார். அவரின் மறைவுக்கு வெள்ளித்திரை - சின்னத்திரையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். 

மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலையில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

எதிர்நீச்சல் தொடருக்கு டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் டப்பிங் பேசிய இறுதி எபிஸோடுக்கான காட்சிகள் இன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. 

எதிர்நீச்சல் தொடரில் அவருக்கு தம்பி பாத்திரத்தில் நடித்துவரும் கமலேஷ் அளித்த அளித்த நேர்காணல் ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். 

எதிர்நீச்சல் தொடரில் மிகமுக்கிய கதாபாத்திரம் ஆதி குணசேகரன். இதில் நடிகர் மாரிமுத்து சிறப்பான நடிப்பை வழங்கி வந்தார். இனிமேல் அவரின் பாத்திரத்தில் வேறு நடிகரை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை பாத்திரத்தில் நடித்துவந்த விஜே சித்ராவின் மறைவுக்குப் பிறகு அந்த பாத்திரத்தில் பலர் மாறிய பிறகும், விஜே சித்ரா இடத்தை நிரப்ப முடியவில்லை. அதைப்போன்றுதான் எதிர்நீச்சலில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் வேறு யார் நடித்தாலும், மாரிமுத்து அளவுக்கு வராது என ரசிகர்கள் குறிப்பிட்டுவருகின்றனர். 

ஆதி குணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT